
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜேஷ் வரவேற்றார். திட்டக்குடி திருக்குறள் பேரவை தலைவர் சீனிவாசன், கற்க கசடற என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கொளஞ்சி, பொருளாளர் சக்ரபாணி பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்பரிசு வழங்கினர். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர். உதவி தலைமைஆசிரியர் வேல்சாமி நன்றி கூறினார்.