நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் கதிரவன் வரவேற்றார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் தில்லை ராஜன், ஊராட்சி தலைவர் சுரேஷ்பாபு, துணைத் தலைவர் செல்வமணி மணிவாசகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அன்பழகி, துணைத் தலைவர் சந்தானலட்சுமி முன்னிலை வகித்தனர்.
பட்டதாரி ஆசிரியர் சக்கரவர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் ராஜசேகரன் தொகுத்து வழங்கினார்.
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியர்கள் ராஜா ராகவன், மலர்விழி, செந்தில்நாதன், ஜீவிதா, சசிகலா, பட்டதாரி ஆசிரியர்கள் புவனேஸ்வரி, ஞானசாந்தி, சுமதி, திவ்யபாரதி, சிவக்குமார், மரியல்பினா ஆகியோர் பரிசு வழங்கினர்.
உதவி தலைமை ஆசிரி யர் ஆனந்தி நன்றி கூறினார்.