
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் நவஜோதி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் டாக்டர் சுகிர்தாதாமஸ், தாளாளர் தீபக்தாமஸ், நிர்வாக இயக்குனர் பவித்ராதீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் பாக்கியசாமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் முனைவர் நவஜோதி மாணவர்களின் எதிர்கால கல்வி, நலன், பெற்றோரை மதித்தல் குறித்துப் பேசினார்.
மழலையர்களின் வரவேற்பு நடனம், குழுநடனங்கள், யோகா, கராத்தே, சிலம்பம், விவசாயிகளின் நிலை குறித்து மவுன மொழிநாடகம் ஆகியவற்றை திறம்பட செய்து காட்டினர். விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கங்கள் வழங்கி பாராட்டினர். பள்ளி கணித ஆசிரியர் சீவலப்பேரிபாண்டியன் நன்றி கூறினார்.