
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : வாண்டியாம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் சகிலா ஆனந்தன், கடலூர் நாட்டிய சிறகுகள் நிறுவனர் ஜீவா ஜாக்குலின், தமிழ் கவிஞர்கள் அறக்கட்டளை யமுனா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இதில் மாணவர்கள் எழுதிய பொரி உருண்டை என்ற சிறுகதை நூல் வெளியிடப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. எழுத்தாளர் நாகா, ஆசிரியர்கள் அமுதா, ரேகா, கிராம நிர்வாகிகள் மணி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் வசந்தி நன்றி கூறினார்.