/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமட்டிக்குப்பம் ஊராட்சியில் பள்ளி கட்டடம் திறப்பு
/
சமட்டிக்குப்பம் ஊராட்சியில் பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : ஜன 04, 2025 05:53 AM

குள்ளஞ்சாவடி; சமட்டிக்குப்பம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடங்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார.
நெய்வேலி சட்டசபை தொகுதி சமட்டிக்குப்பம் ஊராட்சியில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 21 லட்சம் மதிப்பில், வகுப்பறைகள் கட்டடங்கள் கட்டப்பட்டது. அதனை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகள், பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் சமட்டிக்குப்பம் ஊராட்சி தலைவர் பூவராகவன், துணைத் தலைவர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் குணசேகரன், தி.மு.க., அவைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சீனிவாசன், நிர்வாகிகள் முருகவேல், ராம்குமார், பாபு, விருப்பலிங்கம், முருகவேல், ஜெய்சங்கர், சதீஷ், செல்வம், திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.