/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையத்தில் விதை திருவிழா
/
விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையத்தில் விதை திருவிழா
விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையத்தில் விதை திருவிழா
விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையத்தில் விதை திருவிழா
ADDED : அக் 09, 2025 11:38 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம், மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை., ஆகியன சார்பில் விதை திருவிழா நடந்தது.
வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் நடந்த விழாவில் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களின் கண்டுப்பிடிப்புகள் கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டிருந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.விழாவினை வேளாண் விஞ்ஞானி உமாராணி துவக்கி வைத்தார்.
இந்த விழாவில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வெளியிடப்பட்ட ஏ.டி.டி., 59 நெல் ரகம் மற்றும் சணப்பை புதிய ரகம் ஏ.டி.டி., 1 ஆகிய நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட வி.ஆர்.ஐ., 10 மணிலா ரகம் பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட புதிய ரகங்கள் காட்சிபடுத்தப்பட்டது.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பரமணியன் மண் வள பாதுகாப்பு, முறையான உர உபயோகம் குறித்து பேசினார்.கோவை வேளாண் விரிவாக்க மைய இயக்குனர் முருகன், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் லஷ்மிகாந்தன் ஆகியோர் பேசினர்.
வேளாண் அதிகாரிகள் பாஸ்கரன், விஜய்செல்வராஜ், ராஜா, கதிரவன் ஆகியோர் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.
வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் உமா, கண்ணன், சுகுமாறன், ஜெயக்குமார், காய்த்ரி, கலைச்செல்வி், ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
கம்மாபுரம் மற்றும் விருத்தாச்சலம் வட்ட வேளாண் உதவி இயக்குநர்கள் பார்வையில் இடுப்பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டது.