/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.எஸ்.எம்., கல்லுாரியில் கருத்தரங்கம்
/
சி.எஸ்.எம்., கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : பிப் 05, 2024 05:32 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த எருமனுார் சி.எஸ்.எம்.,கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆங்கிலத் துறை சார்பில், இலக்கிய மன்ற கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் பழனிவேல் தலைமை தாங்கினார்.கல்விக்குழும நிறுவனர் மற்றும் தலைவர் சுரேஷ், செயலர் இந்துமதி சுரேஷ் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆங்கிலதுறை தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். பொருளாளர் அருண்குமார், புல முதன்மையர் கவிபாண்டியன், துணை முதல்வர் ஜேசுதாஸ் வாழ்த்துரை வழங்கினர்.
நெய்வேலிஜவகர் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியை சவுமியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆங்கிலத்துறை உதவிபேராசிரியை திலகவதி நன்றி கூறினார்.

