ADDED : டிச 04, 2024 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரத்தில் உள்ள முழு நேர கிளை நுாலத்தில், போட்டி தேர்வு மாணவர்களுக்கு 'நாளை உலகம் நமக்கானது' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
முதல் நிலை நூலகர் முனியப்பன் தலைமை தாங்கினார். கிளை நூலகர் அருள் வரவேற்றார். போட்டித் தேர்வு பயிற்சியாளர் எழிலன் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் காந்தி மன்ற துணை செயலாளர் முத்துக்குமரன் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் போட்டித் தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவ மாணவிகள், வாசகர்கள் பங்கேற்றனர்.