நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அரசு கலை கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் ஜானகிராமன் வரவேற்றார். விரிவுரையாளர்கள் ராஜ்கண்ணு, ராமச்சந்திரன் பங்கேற்றனர்.விருத்தாசலம்,திருவெண்ணைநல்லுார் அரசு கலைக் கல்லுாரி விரிவுரையாளர்கள் பரமசிவம், லலிதா ஆகியோர் 'வணிக வளர்ச்சிக்கான தரமான கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பில் பேசினர். விரிவுரையாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

