
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் வி.சி.,கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் புனே ஒப்பந்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கடலுார் மாவட்டத்தலைவர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். சாம்பவி பாஸ்கரன் வரவேற்றார். கடலுார் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் அறிவுடைநம்பி, முதன்மை செயலாளர் பாவாணன், மாநில நிர்வாகி அழகப்பன் பேசினர்.
பேராசிரியர் ஜானகிராஜா, மாநில துணை செயலாளர் ஏழுமலை, அன்பழகன், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.