ADDED : ஜன 26, 2026 03:42 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
மாலை 4:00 மணியளவில், சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.
இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
