/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலக நன்மை வேண்டி சிவனடியார்கள் நடைபயணம்
/
உலக நன்மை வேண்டி சிவனடியார்கள் நடைபயணம்
ADDED : ஜன 08, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் இருந்து கோட்லாம்பாக்கம் வரையில் உலக நன்மை பெற வேண்டி சிவனடியார்களின் ஆன்மிக நடைபயணம் நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருநாவுக்கரசு ஆன்மிக தொண்டர்கள் சார்பில் உலக நன்மை பெற வேண்டி ஆன்மிக நடைபயணம் துவங்கியது.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இருந்து துவங்கி, கடலுார் சாலை, பஸ நிலையம், நான்குமுனை சந்திப்பு, காந்திரோடு வழியாக புதுப்பேட்டை அடுத்த கோட்லாம்பாக்கம் சித்தவடமடம் சென்று அங்கு சுவாமியை வழிபாடு செய்தனர்.
இதில் சிவனடியார்கள், ஆன்மிக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.