/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் சுத்த சன்மார்க்க சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கடலுாரில் சுத்த சன்மார்க்க சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 21, 2025 10:48 PM

கடலுார்,; கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சன்மார்க்க சங்க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் நரசிங்கம், அருணகிரி, செங்குட்டுவன், இளங்கோ, குமார், தமிழ்செல்வன், சுப்ரமணியன், வேலன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வடலுாரில் மதுக்கடை, மாமிசக்கடை, மின் மயான எரியூட்டல் மேடையை அகற்றி வடலுாரை புனித நகரமாக அறிவிக்க வேண்டும். வள்ளலார் நேரில் ஆஜரான கடலுார் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தை புனரமைத்து வரலாற்று அடையாள சின்னமாக அறிவித்து அருங்காட்சியமாக மாற்ற வேண்டும்.
வடலுாரில் சிறப்புமிக்க பெருவெளியில் கட்டப்படும் சர்வதேச மைய திட்டத்தை கைவிட வேண்டும். வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கொள்கைக்கு எதிராக உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.