/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருளர் மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
இருளர் மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 01, 2024 05:53 AM

கிள்ளை: கிள்ளையில் இருளர் பழங்குடி மீனவர்களுக்கு, 2 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் கலைஞர் நகர் மீனவ கிராமத்தில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், இருளர் பழங்குடி மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது.
கடல் பொருள் ஏற்றுமதி கழக தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் அருள்மூர்த்தி தலைமை தாங்கினார். நெட்பிஷ் மற்றும் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் வேலு முன்னிலை வகித்தார். முகாமின்போது, இருளர் பழங்குடி மீனவர்கள் 30 நபர்களுக்கு, மீன் கெடாமல் பாதுகாக்க ஐஸ் பாக்ஸ் வழங்கப்பட்டது.
முகாமில், பழையாறு துறைமுகம் கடல் பொருள் ஏற்றுமதி கழக பணியாளர் தேசிங்கு மற்றும் தளபதி நகர், கலைஞர் நகர் மீனவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.