/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பா வயல்களில் புகையான் தாக்குதல்
/
சம்பா வயல்களில் புகையான் தாக்குதல்
ADDED : ஜன 19, 2026 05:13 AM

புவனகிரி: சாம்பா நடவு வயலில் புகையான் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி நீரை கொண்டு ஆண்டு தோறும் கீரப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் சம்பா விதை நேர்த்தி மற்றும் நடவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டும் அதேபோன்று செய்து வந்த நிலையில், விதை முளைப்பு திறன் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
விவசாயிகள் மீண்டும் விதை நேர்த்தி மற்றும் அதிக விலைக்கு பணம் கொடுத்து நாற்று வாங்கி, நடவு பணியை மேற்கொண்டனர்.
தற்போது பயிர் செழித்து கதிர் வந்துள்ள நிலையில், புகையான் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் கீரப்பாளையம், வடஹரிராஜபுரம், திருப்பணி நத்தம், செட்டிகுளம், வன்னியூர், தாதம்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

