ADDED : அக் 16, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று நேமம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார்,46; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குவாட்டர் பாட்டில் மற்றும் ரூ.2,400 பணத்தை பறிமுதல் செய்தனர்.
