ADDED : ஜூலை 28, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: மகன் கண்டித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 60; இவர், தினசரி மது அருந்தி சாப்பிடாமல் துாங்கினார். இதனை அவரது மகன் ஞானசேகர், 43; கண்டித்தார். இதனால், மனமுடைந்த செல்வராஜ் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே மதுவில்விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
பின், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் இறந்தார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.