ADDED : அக் 25, 2026 10:08 PM

கடலுார்: கடலுார் மாநகரில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இன்று (அக்.,25) காலை விநாயகர், முருகர், அப்பர், பைரவர், நவக்கிரகங்கள் என, அனைத்து சுவாமிகளுக்கும் எண்ணெய் காப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை சாய் ரட்ச பூஜை நடந்தது. பாடலீஸ்வரருக்கு, 108 கிலோ அன்னம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பாடலீஸ்வரர் அன்னாபிஷேக அலங்காரத்திலும், பெரியநாயகி அம்மன் தங்க கவசத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார், மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர், கம்மியம்பேட்டை புறவழிச்சாலை வில்வநாதீஸ்வரர், புருகீஸ்பேட்டை சுப்ரமணியர், வண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர் கோவில்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஆல்பேட்டை வெட்டவெளி சித்தர் பீடத்தில் சிறப்பு அலங்காரம் நடந்தது.
அன்னாபிேஷகம்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் சிவன் கோவிலில் இன்று அன்னாபிேஷகம் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் மற்றும் சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிேஷகம் நடந்தது.விழாவை முன்னிட்டு இன்று மாலை அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.இரவு 7:00 மணிக்கு சிவனுக்கு அன்னத்தால் அபிேஷகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.விழாவில் பக்தர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
