ADDED : மே 13, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : நெய்வேலி கோட்ட போலீசாருக்கு வஜ்ரா, வருண் வாகனம் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
நெய்வேலி உட்கோட்டத்தில் காவல்துறை வாராந்திர கவாத்து பயிற்சி டவுன்ஷிப் செக்யூரிட்டி திடலில் நடந்தது.
இதில் குறிஞ்சிப்பாடி, வடலுார், நெய்வேலி டவுன்ஷிப் உள்ளிட்ட 7 போலீஸ் நிலைய போலீசார் பங்கேற்றனர்.
இதில், கலவரம் நடக்கும் இடங்களில் காவல்துறை வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வெடிக்க செய்து, வருண் வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
எஸ்.பி.,, ஜெயக்குமார், பார்வையிட்டு போலீசாருக்கு பயிற்சி அளித்தார். டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, இளவழகி, பாண்டிச்செல்வி, ஜெயலட்சுமி உடனிருந்தனர்.