/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு 28ம் தேதி பேச்சுப்போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு 28ம் தேதி பேச்சுப்போட்டி
ADDED : டிச 22, 2024 07:47 AM
புவனகிரி : புவனகிரி கவிஞர் கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் 32 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி வரும் 28ம் தேதி நடக்கிறது.
புவனகிரி கவிஞர் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி வருகின்றனர். தற்போது 32 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புவனகிரி தேவாங்கர் திருமண மண்டபத்தில் போட்டிகள் நடக்கிறது. 6 முதல் 8ம் வகுப்பு நிலையில், நான் விரும்பும் விடுதலை போராட்ட வீரர், நடு நிலையில் நான் விரும்பும் கவிஞர், மேல் நிலையில் நான் விரும்பும் நீதி நுால் என்ற தலைப்புகளில் போட்டிகள் நடக்கிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க பேரவை தலைவர் கல்யாணசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.