/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புனித வளனார் பள்ளியில் விளையாட்டு விழா
/
புனித வளனார் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஆக 30, 2025 09:02 AM

கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி முதல்வர் ரோசாலி தலைமை தாங்கினார். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
கடலுார் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் ராமஜெயந்தி, திருப்பாதிரிப்புலியூர் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி முதல்வர் சகாயராஜா, சின்ன கங்கணாங்குப்பம் இம்மாகுலேட் கல்லுாரி செயலாளர் மேரி நிர்மலா ஆகியோர் பேசினர்.
முன்னதாக திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன், விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.