/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு பயிற்சி முகாம்; கடலுாரில் 25ம் தேதி துவக்கம்
/
விளையாட்டு பயிற்சி முகாம்; கடலுாரில் 25ம் தேதி துவக்கம்
விளையாட்டு பயிற்சி முகாம்; கடலுாரில் 25ம் தேதி துவக்கம்
விளையாட்டு பயிற்சி முகாம்; கடலுாரில் 25ம் தேதி துவக்கம்
ADDED : ஏப் 22, 2025 06:43 AM
கடலுார்; கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டுப் இலவச பயிற்சி முகாம் வரும் 25ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டு தோறும் நடக்கும் 21 நாட்கள் இலவச கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 25ம் தேதி துவங்குகிறது.
மே 15ம் தேதி வரை 21 நாட்கள் காலை 6:00 முதல், 8:00 மணி வரையும், மாலை 4:30 முதல் 6:30 மணி வரையும் முகாம் நடக்கிறது. முகாமில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து மற்றும் டேக்வோண்டோ ஆகிய 5 விளையாட்டுக்களுக்கு சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி நிறைவு நாளில் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.