/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி 100 சதவீத தேர்ச்சி

ADDED : மே 14, 2025 11:42 PM

கடலுார்: கடலுார் அடுத்த நெல்லிக்குப்பம், வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
நெல்லிக்குப்பம், வாழப்பட்டு ஸ்ரீவள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ.,பள்ளி பொதுத்தேர்வில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2 வில் மாணவர் நிதிஷ் 500க்கு 477 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
மாணவர்கள் தஸ்லிமா பர்வின் மற்றும் கிருபாகரன் ஆகியோர் முறையே 460 மற்றும் 459 மதிப்பெண் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்தனர். பத்தாம் வகுப்பில் மாணவர் கிரண் 500க்கும் 480 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவர் சபரிஷ்ராம் 477மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், அகில் மித்திரன் 465 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர் சீனுவாசன் மற்றும் தாளாளர் இந்துமதி சீனுவாசன் பாராட்டி பரிசு வழங்கினர். கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு, உதவி தலைமைஆசிரியை மீனா ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.