/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கற்பித்தலில் சாதனை படைத்து வரும் எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
/
கற்பித்தலில் சாதனை படைத்து வரும் எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கற்பித்தலில் சாதனை படைத்து வரும் எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கற்பித்தலில் சாதனை படைத்து வரும் எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ADDED : அக் 13, 2024 07:33 AM

சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ஊராட்சியில் கடந்த 1988 ம் ஆண்டு 40 மாணவர்களுடன் எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிஆரம்பிக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம் கிராமபுற மக்களின் அறியாமையை நீக்கி வாழ்வில் ஒளியேற்றிடவும், வருங்கால பாரதத்தை வளமாக மாற்றிடவும், தம் பள்ளி மாணவர்களை அனைத்து துறைகளிலும் கோலோச்சிட செய்ய வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 2,200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்), காற்றோட்டமான வகுப்பறைகள், விசாலமான விளையாட்டு திடல், என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கல்வி நிறுவனமாக எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு அரசு துறைகளில் மருத்துவர்களாகவும், இன்ஜினியர்களாகவும், போலீஸ் உயரதிகாரிகளாகவும், இதர அரசுதுறைகளில் உயரதிகாரிகளாகவும் உள்ளனர்.கடந்த 27 ஆண்டுகளாக மாநில அளவில் 100க்கு 100 தேர்ச்சி பெற்று வருகிறது. கடந்த கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்ததற்காக மாநில அரசின் சிறந்த பள்ளிகளுக்கான விருதினை பெற்றுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் பயின்ற 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்று இலவசமாக மருத்துவம் பயின்று வருகின்றனர்தற்போதைய பள்ளி நிர்வாகிகளான தாளாளர் சாமுவேல்சுஜின் மற்றும் நிர்வாக இயக்குனர் தீபாசுஜின் குழந்தை நல மருத்துவர் ஆகியோர் இணைந்து பள்ளியை செவ்வனே நடத்தி வருகின்றனர்.முன்மாதிரியான பள்ளியாக . கராத்தே, யோகா, சிலம்பம், வில்வித்தை, ஸ்கேட்டிங், செஸ், கேரம், கிரிக்கெட், அபாகஸ், பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் என பல்வேறு கலைகளுக்கு கூடுதல் பயிற்ச்சியளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கிரிக்கெட், யோகா, கராத்தே, சிலம்பம் ஆகிய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்கள் மாநில அளவிலும் தெரிவு செய்யப்பட்டு தற்போது மாநில அளவில் விளையாடி வருகின்றார்கள். ஆங்கில புலமைக்கு , கையெழுத்து பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது.