/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பணியாளர் எண்ணிக்கையில் குளறுபடி; நெல்லிக்குப்பத்தில் துாய்மை பணி பாதிப்பு
/
பணியாளர் எண்ணிக்கையில் குளறுபடி; நெல்லிக்குப்பத்தில் துாய்மை பணி பாதிப்பு
பணியாளர் எண்ணிக்கையில் குளறுபடி; நெல்லிக்குப்பத்தில் துாய்மை பணி பாதிப்பு
பணியாளர் எண்ணிக்கையில் குளறுபடி; நெல்லிக்குப்பத்தில் துாய்மை பணி பாதிப்பு
ADDED : ஆக 13, 2025 05:30 AM
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு சில நிரந்தர துாய்மை பணியாளர்களே உள்ளனர். இவர்கள், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை மட்டுமே செய்கின்றனர்.
துாய்மை பணிக்கு போதிய ஆட்கள் இல்லாததால் துாய்மை பணி மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தினமும் 81 பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டுமென ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி 81 பணியாளர்கள் வேலைக்கு வருவதில்லை. தினமும் அதிகபட்சமாக 50 பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும்.
தினமும் 7 டன் எடையுள்ள காய்கறி கழிவு போன்ற மக்கும் குப்பைகளை வாங்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் உள்ளதால் 2 டன் அளவுக்கே மக்கும் குப்பை கிடைக்கிறது.
ஒப்பந்தத்தில் கூறிய எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர்களை நியமித்தால் மட்டுமே முறையாக துாய்மை பணியை மேற்கொள்ள முடியும். மேலும் அவர்களுக்கு குறைந்தது தினமும் 500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.
ஆனால் 340 மட்டுமே சம்பளம் வழங்குவதாக துாய்மை பணியாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினர் துாய்மைப் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளதால் அதிகாரிகளும் சட்டபடி நடக்க அச்சப்படுகின்றனர்.