/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 20, 2025 07:24 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பின், துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ அடையாள அட்டைகள் வழங்கினார்.
அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்கள் வழங்க குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. நிகழ்ச்சியில், நகராட்சி துணை சேர்மன் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், மேலாளர் சரவணன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், கவுன்சிலர்கள் ஜெயபிரபா, கவுரி, இலக்கியா, புனிதவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.