ADDED : அக் 05, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுாரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்பேத்கர், பெரியார் சிலைகள் அகற்றப்பட்டன.
வடலுார் நான்கு முனை சந்திப்பு அருகில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் போக்குவரத்து மற்றும் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருப்பதாக புகார் எழுந்தது. சிலைகளை அகற்ற வடலுார் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வேறு இடத்தில் சிலைகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டு சிலைகளையும் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.