/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழிப்புணர்வு பாடல்கள் பாடிக்கொண்டே சிலம்பம் விளையாடி மாணவி சாதனை
/
விழிப்புணர்வு பாடல்கள் பாடிக்கொண்டே சிலம்பம் விளையாடி மாணவி சாதனை
விழிப்புணர்வு பாடல்கள் பாடிக்கொண்டே சிலம்பம் விளையாடி மாணவி சாதனை
விழிப்புணர்வு பாடல்கள் பாடிக்கொண்டே சிலம்பம் விளையாடி மாணவி சாதனை
ADDED : மே 14, 2025 11:35 PM

கிள்ளை:போதை பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டில் பள்ளி மாணவி 50 நிமிடம் தொடர்ந்து போதை பொருள் விழிப்புணர்வு பாடல்களை பாடிக்கொண்டே பலவிதமான சிலம்பாட்டங்களை விளையாடி சாதனைப் படைத்தார்.
கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு கிராமத்தில், போதை பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பயிற்சியாளர் வைத்தி கார்த்திகேயன் தலைமையில், தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆதிஸ்ரீ, 50 நிமிடம் தொடர்ந்து போதை விழிப்புணர்வு
பாடல்களை பாடிக்கொண்டே, ஒன்று மற்றும் இரண்டு கம்பு சிலம்பம், தீப்பந்தம், ஸ்டார் சிலம்பம், சுருள்வால் சிலம்பம் என விளையாடி சாதனைப்படைத்தார்.
அவருடன், அவரது சகோதரர் அதியமான் சிலம்பம் விளையாடினார். சாதனைப்படைத்த மாணவி ஆதிஸ்ரீக்கு, ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிறுவன நிர்வாகி சீனுவாசன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், கிராம நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், கலியபெருமாள், அன்புஜீவா, இளம்வழுதி, பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.