ADDED : அக் 04, 2025 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது.
இதனையொட்டி கல்வி தெய்வமான சரஸ்வதியை வழிபட்டு, குழந்தைகளுக்கு நெல்லில் அகரம் எழுத வைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து நெல்லில் எழுதி, பள்ளியில் சேர்த்தனர்.
இதேப் போன்று, கடலுார் மற்றும் பண்ருட்டி வள்ளிவிலாஸ் ஆலயா மழலையர் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்தது.