/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலித்தீன் பையை முகத்தில் கட்டிக்கொண்டு விஷ வாயுவை செலுத்தி மாணவர் தற்கொலை

ADDED : ஜூன் 11, 2025 08:33 PM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே பள்ளி மாணவர் ஒருவர் பிளாஸ்டிக் பையை முகத்தில் கட்டிக்கொண்டு விஷ வாயுவை செலுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரங்கிப்பேட்டை அடுத்த ஆணையங்குப்பம் கே.பி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராஜகோபால், 48; இவரது, மகன் சந்திரயோகேஷ்,17; இவர், சிதம்பரம் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.சி., பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சந்திரயோகேஷ் நேற்று முன்தினம் இரவு துாங்குவதற்கு தனது வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றார்.
நேற்று காலை அவரது தந்தை ராஜகோபால், மகனை எழுப்ப மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அங்கு, சந்திரயோகேஷ், இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கழுத்தில் பாலித்தீன் பையால் தானாகவே சுற்றி டேப் ஒட்டிக்கொண்டு, அருகே விஷ தன்மை கொண்ட ஸ்ப்ரே பாட்டில் மூலமாக வாயுவை செலுத்தி தற்கொலை செய்துக்கொண்வடார்.
தகவலறிந்த, பரங்கிப்பேட்டை போலீசார் மாணவர் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.