/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெளிவான விளக்கம் கிடைத்தது மாணவ, மாணவிகள் பேட்டி
/
தெளிவான விளக்கம் கிடைத்தது மாணவ, மாணவிகள் பேட்டி
ADDED : ஜூன் 23, 2025 07:35 AM

பயனுள்ளதாக இருந்தது
'தினமலர்' நாளிதழ் நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி மற்றும் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கவுன்சிலிங் விண்ணப்பிப்பது முதல், கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது குறித்தும், கல்லுாரி சேரும் முறை, படித்த முடித்த பின் வேலைவாய்ப்பு பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டேன்.
-தன்யஸ்ரீ, பண்ருட்டி.
தெளிவு கிடைத்தது
இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்தும், ரேங்க் லிஸ்ட், கல்லுாரிகளை தேர்வு செய்வது, கல்லுாரி கட்டண விபரங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். மேலும் கல்லுாரி சேர்ந்த பின் எப்படி படிக்க வேண்டும், படித்து முடித்த பின் வேலைவாய்ப்பை எப்படி பெற வேண்டும் எனப் புரிந்தது. லிங்க்டு இன் புரோபைல், ஆன்லைன் பிளாட்பார்மில் உள்ள வாய்ப்புகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் குறித்தும் தெளிவு கிடைத்தது.
-ஸ்ரீஐஸ்வர்யா, சொர்ணாவூர்.
எதிர்காலத்திற்கு வழிகாட்டி
இன்ஜினியரிங் கவுன்சிலிங், 'சாய்ஸ் பில்லிங்' குறித்து 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியால் தெளிவாக தெரிந்து கொண்டேன். எந்தெந்த பாடப்பிரிவில் சேர்ந்தால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும் போன்ற தகவல்கள் கிடைத்தது. கல்லுாரியில் படிக்கும் போதே, எதிர்கால வேலைவாய்ப்புக்கு தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைத்தது.
-நவீன்குமார், பெரிய கங்கணாங்குப்பம்.
குழப்பம் நீங்கியது
கல்லுாரியில் சேர்ந்த நாள் முதல், எப்படி திட்டமிட்டு படித்தால் எதிர்காலத்தில் நினைத்த வேலைவாய்ப்பை பெறலாம் எனத் தெரிந்தது. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு எப்படி விண்ணப்பிப்பது, கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை எப்படி தேர்வு செய்வதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவடைந்தேன். இன்ஜினியரிங் துறையில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள், தேர்ச்சி, வேலைவாய்ப்பு குறித்து புள்ளி விவரங்களுடன் நிபுணர்கள் எடுத்துக் கூறியது பயனுள்ளதாக அமைந்தது.
சரண் பிரதீப், வடலுார்.