ADDED : நவ 09, 2026 04:08 PM
குறிஞ்சிப்பாடி: ஸ்கூட்டரில் சென்ற பள்ளி மாணவர், கீழே விழுந்து பரிதாபமாக பலியானார்
விருத்தாசலம் அடுத்த விருதகிரிகுப்பத்தை சேர்ந்தவர் இளவரசன் மகன் ஹரிஷ் மாதவன்,17; இவர், குறிஞ்சிப்பாடி அண்ணா நகரில் தங்கி, கடலூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார்.
இவர் நேற்று (நவ.,8) தனது நண்பரான, குறிஞ்சிப்பாடி, ராமலிங்கம் மகன் கனிஷ்கர்,17; என்பவருடன் ஸ்கூட்டரில், கடலூர் ரோட்டில் சென்றார். ஹரிஷ் மாதவன் ஸ்கூட்டரை ஓட்ட, கனிஷ்கர் பின்னால் அமர்ந்திருந்தார்.
குறிஞ்சிப்பாடி சிங்கபுரி கூட்டுறவு சங்கம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், சாலையோரம் இருந்த சிமெண்ட் கட்டையில் மோதி கவிழந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர் இருவரையம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஹரிஷ்மாதவன் இறந்தார். கனிஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.
விபத்து குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
