
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் அருண்பாண்டியன்,24; வேலையின்றி வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த ௧௪ம் தேதி மாலை 5.00 மணியளவில் அருண்பாண்டியன் தனது நண்பன் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அன்றிரவு 10.35 மணியளவில் தனது தாய் லட்சுமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வந்துவிடுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நிலையில் அருண்பாண்டியன் தந்தை பரமசிவம் கொடுத்துள்ள புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து மாயமான அருண்பாண்டியனை தேடி வருகின்றனர்.