தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவர்கள் காவல் படை துவக்கம்

மாணவர்கள் காவல் படை துவக்கம்

மாணவர்கள் காவல் படை துவக்கம்


ADDED : மார் 06, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்- கடலூர் மாவட்டம் துாக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையம் சார்பில் அழகியநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 'மாணவர் காவல் படை' துவக்க விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு தூக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளியில் 22 மாணவர்கள் 22 மாணவிகள் என மொத்தம் 44 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாணவர் காவல் படை ஏற்படுத்தப்பட்டது.

காவல் படை மாணவர்களுக்கு குற்றம் குறித்து விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, மோட்டார் வாகன சட்டம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள், பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு, அரசின் நலத் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஜெயச்சித்ரா, ரங்கராதன், மஞ்சுளா, உமா உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், போலீசார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us