ADDED : அக் 24, 2025 03:10 AM

சிதம்பரம்: கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக அதிகனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
டெல்டா கடைமடை பகுதிகளாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பல்வேறு பகுதிகளில் கடும் மழையால் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
குறிப்பாக, சிதம்பரம் அடுத்தள்ள துரைப்பாடி, கூடுவெளி, பெருங்காலூர், முகையூர், பரிவளாகம், சிறுகாலூர், ராதாநல்லூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண் ணீரில் மூழ்கியுள்ளது.
நேற்று காலை முதல் மழை விட்ட நிலையில், இப்பகுதி வடிகால் வாய்க்கால்கள் சரியான முறையில் துார் வாரப்படாததால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால், பயிரிட்ட சம்பா பயிர்களை நல்ல முறையில் வளர்த்தெடுத்து அறுவடை செய்ய முடியுமா என அப்பகுதி விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.

