ADDED : செப் 05, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: கடலுாரில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கடலுாரில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில், ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குருசில், சிவசெல்வ கணபதி ஆகியோர் இரட்டையர் பிரிவு இறகுபந்து போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
போட்டியில் வென்ற மாணவர்களை பள்ளி தாளாளர் செங்கோல், செயல் இயக்குனர் சாலை கனகதாரன், முதல்வர் புனிதவள்ளி ஆகியோர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.