UPDATED : அக் 21, 2026 03:58 PM
ADDED : அக் 21, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
வேப்பூர்: துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேப்பூர் அடுத்த காளியாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்,39; தச்சு வேலை செய்து வந்தார். இவர், கடந்த 19ம் தேதி வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அதனை அவரது மனைவி சத்யா கண்டித்தார்.
அதில் மனமடைந்த விஜயகுமார், தனது அறைக்குள் சென்று துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
