/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீனஸ் மெட்ரிக் பள்ளியில் கோடைக்கால பயிற்சி நிறைவு
/
வீனஸ் மெட்ரிக் பள்ளியில் கோடைக்கால பயிற்சி நிறைவு
ADDED : மே 24, 2025 11:48 PM

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் 41ம் ஆண்டு கோடைக்கால ஆங்கில இலக்கண பேச்சுப் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். இணைத் தாளாளர் ரூபியால் ராணி முன்னிலை வகித்தார். மாணவி ஹர்ஷிதா வரவேற்றார்.
பள்ளி முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ருபிகிரேஸ் பொனிகலா ஆகியோர் ஆங்கில இலக்கணத்தின் அவசியம் குறித்து பேசினர்.
தொடர்ந்து, பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஆங்கில இலக்கண வகுப்பு நடத்திய வீனஸ் நர்சரி பள்ளி முதல்வர் லியோ பெஸ்கிராவிற்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
விழாவை மாணவர்கள் ஷாம், ஸ்ரீராம் தொகுத்து வழங்கினர். மாணவி தஷிகாஸ்ரீ நன்றி கூறினார்.