ADDED : மே 31, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் நடந்த மல்லர் கம்பம் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடலுார் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் சார்பில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை மற்றும் சான்றிதழை, மாவட்ட மல்லர் கம்ப கழக தலைவர் ராமச்சந்திரன் வழங்கினார்.
நிறைவுவிழாவிற்கு சிறப்பு விருந்தினர் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட மல்லர் கம்பம் கழக துணைத்தலைவர் ஓம்பிரகாஷ், பொருளாளர் மணிபாலன், எக்விடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சசிகலா சான்றிதழ் வழங்கினர்.
ஏற்பாடுகளை மாவட்ட மல்லர் கம்பம் கழக துணைத் தலைவர் அசோகன், செயலாளர் கார்த்திக், பயிற்றுனர்கள் புருஷோத்தமன், கோபி செய்திருந்தனர்.