/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோடைகால பயிற்சி சான்றிதழ் வழங்கல்
/
கோடைகால பயிற்சி சான்றிதழ் வழங்கல்
ADDED : மே 22, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் மினி விளையாடடரங்கில் கோடைகால பயிற்சி நிறைவு முகாம் நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விருத்தாசலம் மினி விளையாட்டரங்கில் கோடைகால பயிற்சி முகாம், கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து பயிற்சியில், விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த 50 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
முகாம் நிறைவு விழாவில், கால்பந்து பயிற்சியாளர் அறிவழகன் வரவேற்றார்.
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், சீருடை, சிற்றுண்டி ஆகியவற்றை நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் வழங்கி, வாழ்த்தினார்.