ADDED : மார் 05, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராஜமகேந்திரன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மகேஷ், செயலாளர் ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார்.
பட்டுக்கோட்டையில் நில அளவை பணி மேற்கொண்ட நில அளவர் பவ்யாவை தாக்கிய ரவுடியை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சங்க பொருளாளர் பரந்தாமன் நன்றி கூறினார்.

