நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: பூவாலை அங்காளம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சத்திரம் அடுத்த பூவாலை அங்காளம்மன் கோவிலில், மாதந்தோறும் அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். இந்நிலையில், இம்மாத ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி மாலை 6.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சலில் வைத்து தாலாட்டுப்பாடி, உற்சவம் நடந்தது.
அதேபோல் சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

