UPDATED : நவ 06, 2026 07:24 PM
ADDED : நவ 06, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் செயல்பட்டு வரும் தற்காலிக பட்டாசு கடைகளை தாசில்தார் ஆய்வ செய்தார்.
தீபாவளியை முன்னிட்டு சேத்தியாத்தோப்பில், துவங்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசு கடைகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாசில்தார் ஷானாஸ் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, பட்டாசு கடைகளில் உள்ள தீ தடுப்பு உபகரணங்கள், தண்ணீர், மணல் வாலிகள் மற்றும் , தீ அணைப்பான் கருகில் உள்ளதா என்பதை உறுதி செய்த அவர், விதிமுறைகளை பின்பற்றுமாறு வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அப்போது ஆர்.ஐ., பிரபாகரன், வி.ஏ.ஓ., சுந்தரகணேசன், கிராம உதவியாளர் அன்புதாஸ் உடனிருந்தனர்.
