/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதி மீறி மண் எடுத்து விற்பனை: ஒன்றிய கூட்டத்தில் புகார்
/
அனுமதி மீறி மண் எடுத்து விற்பனை: ஒன்றிய கூட்டத்தில் புகார்
அனுமதி மீறி மண் எடுத்து விற்பனை: ஒன்றிய கூட்டத்தில் புகார்
அனுமதி மீறி மண் எடுத்து விற்பனை: ஒன்றிய கூட்டத்தில் புகார்
ADDED : பிப் 17, 2024 11:50 PM

பண்ருட்டி: வி.கே.டி.சாலைக்கு அனுமதி பெற்று, முறைகேடாக மண் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பண்ருட்டி ஒன்றிய குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், சேர்மன் சபா பாலமுருகன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., க்கள் சங்கர், சக்தி, துணை சேர்மன் தேவகி முன்னிலை வகித்தனர். டாக்டர் அறிவொளி, துணை பி.டி.ஓ.க்கள் ராஜ்குமார், சுடர்வேல்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான விவாதம் நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர் தேவநாதன் பேசுகையில், எனது வார்டில் சாலை அமைக்க பூஜை போட்டு 4 மாதங்கள் ஆகியும் போடவில்லை. அதே போன்று, எம்.எல்.ஏ., நிதியில் போடப்பட்ட போர்வெல் உபயோகமில்லாமல் உள்ளதாக தெரிவித்தார்.
குமரன் (அ.தி.மு.க.,) பேசுகையில், அழகப்ப சமுத்திரம் பகுதியில் வி.கே.டி., சாலைக்காக மண் எடுக்க 4 ஏக்கர் பரப்பளவில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 21 ஏக்கர் அளவிற்கு முறைகேடாக மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. விதிமீறி மண் எடுத்ததால் அப்பகுதி விவசாயிகள் பாதித்துள்ளனர். எனவே, மண் எடுத்தவர்கள் மீது ஒன்றியம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சேர்மன், இப்பிரச்னை குறித்து ஒன்றியம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி கனிம வளத்துறைக்கு புகார் செய்யப்படும் என்றார்.