ADDED : ஜன 10, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை,:பரங்கிப்பேட்டை அருகே டாஸ்மாக் சரக்கு விற்ற வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அம்பாள் நகர் சுடுகாடு அருகே டாஸ்மாக் சரக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாஸ்மாக் சரக்கை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த மஞ்சக்குழி கிராமத்தை சேர்ந்த பிரகாஷை, 35; கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 7 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.