/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ஆசிரியர்கள் 2ம் நாளாக சாலை மறியல்
/
கடலுாரில் ஆசிரியர்கள் 2ம் நாளாக சாலை மறியல்
ADDED : ஜூலை 19, 2025 03:09 AM

கடலுார் : கடலுாரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இரண்டாம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோ ஜாக்) இரண்டாவது நாளாக நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்ளிட்ட 210 பேரை கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.