தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மேல்பாதி ஊராட்சியை மேம்படுத்துவதே லட்சியம்: ஊராட்சி தலைவர் கரும்பாயி வீரப்பன் உறுதி

மேல்பாதி ஊராட்சியை மேம்படுத்துவதே லட்சியம்: ஊராட்சி தலைவர் கரும்பாயி வீரப்பன் உறுதி

மேல்பாதி ஊராட்சியை மேம்படுத்துவதே லட்சியம்: ஊராட்சி தலைவர் கரும்பாயி வீரப்பன் உறுதி


ADDED : மார் 02, 2024 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம் : மேல்பாதி ஊராட்சியை மேம்படுத்துவதே எனது 'லட்சியம்' என ஊராட்சி தலைவர் கரும்பாயி வீரப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது;

கம்மாபுரம் ஒன்றியம் மேல்பாதி ஊராட்சி வளர்ச்சிக்கு அரசு அதிகாரிகள் ஆலோசனையுடன், ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் முழு ஒத்துழைப்புடன் கிராமங்களின் வளர்ச்சிப் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறேன்.

மேல்பாதி ஊராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க என்.எல்.சி., அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மேம்பாட்டிற்காக மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துழை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தார் சாலை, வடிகால் வாய்க்கால், சிறுபாலம், அங்கன்வாடி மையம் சீரமைப்பு, சத்துணவு சமையல் கூடம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கவும், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களின் மேம்பாட்டிற்காக ஊராட்சியில் உள்ள வார்டுகளில் அனைத்து தெருக்களிலும் மின்விளக்கு, சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேல்பாதி ஊராட்சியை மேம்படுத்தி தன்னிறைவு பெற வைப்பதே எனது லட்சியம். இவ்வாறு மேல்பாதி ஊராட்சி தலைவர் கரும்பாயி வீரப்பன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us