/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா கடத்திவந்த கார் மரத்தில் மோதி விபத்து
/
குட்கா கடத்திவந்த கார் மரத்தில் மோதி விபத்து
ADDED : நவ 13, 2024 08:19 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருகே குட்கா பொருட்கள் கடத்தி வந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் மாநிலம், ஜாலுார் மாவட்டம், தைசைலா பகுதியை சேர்ந்தவர்கள் சேந்தாராம்,24; துர்காராம், 26; தீபக்.
இவர்கள் பேரும் நேற்று காலை 6:00 மணிக்கு பண்ருட்டி-கெடிலம் (கடலுார்-சித்துார் சாலை) சாலையில் டொயோட்டா காரில் சென்று கொண்டிருந்தனர். காரை துர்காராம் ஓட்டி வந்தார். திருவாமூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது.
தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் துர்காராமை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் காரில், 10 மூட்டைகள் ஹான்ஸ் கடத்தி வந்தது தெரியவந்தது.
ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குட்கா முட்டைகளை பறிமுதல் செய்து, சேந்தாராமை கைது செய்தனர். தீபக் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

