/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கந்த புராணம் முற்றோதல்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கந்த புராணம் முற்றோதல்
ADDED : அக் 27, 2025 12:12 AM

விருத்தாசலம்: மகா கந்த சஷ்டியை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிக்கு முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வளாகத்தில் மகா சஷ்டியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனுறை குமரேஸ்வரர் கோவிலில் தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது.
இந்நிலையில், திருமுதுகுன்றம் பன்னிரு திருமுறை வழிபாட்டு மன்றம் சார்பில், கோவில் வளாகத்தில் தினசரி கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் அருளிய கந்தபுராணம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நேற்று இரவு 8:00 மணியளவில் முருகர் சுவாமி, ஆதிசக்தி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மகா கந்த சஷ்டி தினமான இன்று (27 ம் தேதி) மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி, நாளை (28 ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

