sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'பெஞ்சல்' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம்... தயார்; கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்

/

'பெஞ்சல்' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம்... தயார்; கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்

'பெஞ்சல்' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம்... தயார்; கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்

'பெஞ்சல்' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம்... தயார்; கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்


ADDED : நவ 30, 2024 06:56 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார : 'பெஞ்சல்' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்துள்ளார்.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளதாலும் கரையை கடக்கும் போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலுார் மாவட்டம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:

கடலுார் மாவட்டத்தில் மழையால் 22 இடங்கள் மிகவும் பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், 39 இடங்கள் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், 20 இடங்கள் மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், 158 இடங்கள் குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும் என மொத்தம் 239 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கனமழையினை எதிர்கொள்ள ஒவ்வொரு துணை கலெக்டர் அல்லது உதவி இயக்குனர் நிலையில் 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, ஒரு மாநகராட்சிக்கு என தனித்தனியே அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 191 தற்காலிக தங்குமிடங்கள் தயார்நிலையில் உள்ளன.

பேரிடர் மீட்பு படை தயார்


மாவட்டம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 30 நபர்கள் கொண்ட குழுவினரும், 25 நபர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்திட முதல் தகவல் அளிப்பவர்கள் 4,932 நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறை


கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையினை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04142 - 220 700, வாட்ஸ்ஆப் எண்94899 30520 தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் கடலுார் வட்டத்திற்கு 04142 - 295189, 94450-00529, பண்ருட்டி வட்டத்திற்கு 04142 - 242174, 94450-00530, குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு 04142 - 258901, 94429-80502, சிதம்பரம் வட்டத்திற்கு 04144 -227866, 94450-00527, புவனகிரி வட்டத்திற்கு 04144 - 240299, 98423-22044, காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்கு 04144- 262053, 94450-00528, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கு 04144 -245257, 94442-16903, விருத்தாசலம் வட்டத்திற்கு 04143 -238289, 94450-00531, திட்டக்குடி வட்டத்திற்கு 04143 - 255249, 94450-00532, வேப்பூர் வட்டத்திற்கு 04143 - 241250, 89397-70651 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொண்டு பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

மின்சார வாரியத்தை சேர்ந்த 2263 முன்களப்பணியாளர்களும், 274 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்களும், மீட்புப் பணிக்காக 242 ஜேசிபிகளும், 104 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 119 ஜென்செட்கள், 14 பொக்லைன்கள், 12 கிரேன்கள், 22 லாரிகள், 28 ஜெனரேட்டர்கள், 66854 கிலோ பிளிச்சிங் பவுடர் இருப்பு உள்ளன.

மேலும், 82,450 மணல் மூட்டைகளும், 14,728 சவுக்கு கட்டைகளும், 82 தேடும் மின் விளக்குகளும், 512 டார்ச் லைட்களும், 2 ரப்பர் படகுகளும், 4,942 மின் கம்பங்களும், 148 கி.மீ மின் கடத்திகளும், 144 மின்மாற்றிகளும் தயார்நிலையில் உள்ளன. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அத்தியவசிய உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். முதியோர்கள், கர்ப்பினிகள், குழந்தைகள் ஆகியோரை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us